நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு தமிழ்நாட்டின் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை பகுதியிலிருந்து வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
என்னது வெங்காயம் கிலோ 150 ரூபாயா? - onion sale
நாகப்பட்டினம்: காரைக்காலில் கடும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தினம்தோறும் 200 முதல் 300 மூட்டைகள் காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்சமயம் வரத்து குறைந்து 30 மூட்டைகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் காரைக்காலில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளில், வெங்காயம் விற்பனைக்கு நடவடிக்கை எடுப்பதுபோல் புதுச்சேரி மாநிலத்திலும் நியாய விலைக்கடைகளில் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் கிடைக்க அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.