மயிலாடுதுறை: திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாதர் ஆலயம் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.
சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவதாக கருதப்படும் இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, இன்று (ஜனவரி 2) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார்.