நாகப்பட்டினம்:திட்டச்சேரி அடுத்த பா. கொந்தை டி.ஆர். பட்டினம் முக்கியச் சாலையைச் சேர்ந்தவர் மாணிக்கம்மாள் (80). இவர் தனது கணவர் சிங்காரவேலுவுடன் (90) நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து புகார் மனு கொடுத்தார்.
அப்போது செய்தியாளரைச் சந்தித்த மூதாட்டி மாணிக்கம்மாள், “எனது கணவருடன் நான் கஷ்டப்பட்டுவருகிறேன். எனது தந்தை உயில் மூலம் பெற்ற குடியிருப்பு இடத்தில் எனது மூன்றாவது மகன் பழநி, அவரது குடும்பத்தோடு வசித்துவருகிறார்.
நாங்கள் எனது முதல் மகன் துரைராஜ் வீட்டில் வசித்துவருகிறோம். எனக்குச் சொந்தமான இடத்திற்கு, பழுதடைந்த வீட்டின் மேற்கூரையைச் சரிசெய்ய சென்றால் என்னையும் எனது கணவரையும் கொலை செய்துவிடுவோம் என பழநி, அவரது குடும்பத்தினர் மிரட்டுகின்றனர்.
எஸ்பியிடம் கண்ணீர் மல்க மனு அளித்த முதிய முதியோர் இருக்க இடமின்றி தவித்துவருகிறோம். எனவே வயதான எங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி - 'ஜெய் பீம்' சூர்யா