நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகரில் உள்ள காய்கறி கடையில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் காவல் துறையினர் காய்கறி கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூதாட்டி மயிலம்மாள் மற்றும் ரபீக் ஆகிய இருவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.