தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6,666 அத்தியாயங்களைக் கொண்ட பழமை வாய்ந்த குர்ஆன்.. ஆய்வு செய்து உலக அதிசயங்களில் இணைக்க வேண்டுகோள்! - indian archealogist

மயிலாடுதுறையில் நீடுர் பகுதியைச் சேர்ந்த அமீனுல்லா என்பவர் அவரது வீட்டில் இருந்த பழமை வாய்ந்த குர்ஆன் 6 ஆயிரத்து 666 அத்தியாயங்களுடன் 19 பக்கத்தில் அரபிக் மொழியில் எழுதப்பட்டுள்ளதால், இதனை ஆராய்ந்து இதன் காலம் குறித்தும், இதன் தொன்மையை உணர்ந்து இதனை உலக அதிசயங்களில் ஒன்றாகவும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

6666 அத்தியாயங்களை கொண்ட பழமைவாய்ந்த குர்ஆன் கண்டெடுப்பு
6666 அத்தியாயங்களை கொண்ட பழமைவாய்ந்த குர்ஆன் கண்டெடுப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 8:15 AM IST

6666 அத்தியாயங்களை கொண்ட பழமைவாய்ந்த குர்ஆன் கண்டெடுப்பு

மயிலாடுதுறை: நீடூர் பகுதியைச் சேர்ந்தவர், அமீனுல்லா(61). பல தலைமுறைகளாக அமீனுல்லா அவரது குடும்பத்தினருடன் நீடூரில் வசித்து வருகிறார். வெளிநாட்டில் வேலை பார்ததும், வணிகம் செய்தும் வந்துள்ளார். அமீனுல்லா வீட்டில் இருந்த குர்ஆன் பழமை வாய்ந்தது என அவரது குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பழமை வாய்ந்த குர்ஆன் 6 ஆயிரத்து 666 அத்தியாயங்களுடன், 19 பக்கத்தில் அரபிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் 2.5 இன்ச் நீளமும், 1.75 இஞ்ச் அகலமும் கொண்ட இந்த குர்ஆன் 68 வகையான மெட்டல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான மெட்டல் பாக்சில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த குர்ஆன்-னின் தொன்மையறிந்த அமீனுல்லா குடும்பம், இதன் காலம் மற்றும் வரலாறு குறித்து அறிய முயற்சி எடுத்த நிலையில், தொல்லியல் துறையினர் இதனை கண்டுகொள்ளாததாகக் கூறி நீதிமன்றத்தை நாடினார், அமீனுல்லா. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 2022ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த முன்னாள் தொல்லியல் துறை அதிகாரி டாக்டர் கவாஜா தலைமையிலான குழுவினர், இந்த பழமை வாய்ந்த குர்ஆன் குறித்து ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வு தொடங்கியதில் இருந்து குர்ஆன் இருக்கும் வீடு மற்றும் சுற்றுப்பகுதி, சாலைகள் என சுற்று வட்டாரங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து குர்ஆன் கூறித்து மேலும் ஆய்வு செய்வதற்காக, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, உதவி கண்காணிப்பாளர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வி மற்றும் வழக்கறிஞர்கள் கொண்ட குழு குர்ஆன் குறித்த ஆய்வில் இணைந்தனர். சமீபத்தில், குர்ஆன் குறித்த ஆய்வு முடிவு பெற்ற நிலையில், குர்ஆன் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆய்வுக்குழு தெரிவித்த விவரங்கள்: குர்ஆன் குறித்து ஆய்வுக்குழுவின் விவரங்கள் பின்வருமாறு, “சென்னை மியூசியத்தின் டாக்டர் கண்ணன் மற்றும் ஜெய்புனிஷா என்பவர்களின் ஆராய்ச்சியைக் கொண்டு பார்க்கையில், 6 தலைமுறைகளாக பாதுகாத்து வந்த மிகச்சிறிய அளவிலான இந்த குர்ஆன், 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என இந்திய தொல்லியல் துறை சான்று வழங்கியது. மேலும் இது மிக அரியவகை பொக்கிஷம் என்று பெங்களூர் ஹெரிடேஜ் சயின்ஸ் இன்ஸ்டியூட் தலைவர் சாரதா சீனிவாசனும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமீனுல்லா கூறுகையில், "300 ஆண்டுகளுக்கு மேல் இந்த குர்ஆனை எங்கள் குடும்பதினர் பாதுகாத்து வருகின்றனர். இதன் வயது அதிகமாக இருக்கும் என்பதால், இதை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நான் நாடினேன். இந்நிலையில், தொல்லியல் துறையினர் சரிவர எதுவும் சொல்லாததால், 2018-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இந்த குர்ஆன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டுமென்று மனு அளித்தேன்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2022ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் தேதி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அதன்பிறகு, தற்போது மத்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், இந்த குர்ஆன் குறித்து முறையாக ஆய்வு செய்து எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், குர்ஆன் புத்தகம் எழுதப்பட்டுள்ள பேப்பர் எந்த வகையான பேப்பர் என்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து இதன் தொன்மையை உணர்ந்து, இதனை உலக அதிசயங்களில் ஒன்றாகவும் அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:குடும்பத்துடன் கிரிவலம் வந்த அண்ணாமலையார்.. அரோகரா கோஷமிட்ட பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details