நாகையை அடுத்த நாகூர் பெரியார் பகுதியைச் சேர்ந்தவர்கள் புயல்மணி(69), லட்சுமி(63) தம்பதி. இருவரும் சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளனர். இந் நிலையில், நேற்று(ஏப்.25) இரவு, லட்சுமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுளளது. இதனையடுத்து மகன் ரவிக்குமார் அவரை நாகை அரசு தலைமை மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இறப்பிலும் இணைபிரியாத வயதான தம்பதிகள்! - நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவரும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பிலும் இணைபிரியாத வயதான தம்பதிகள்!
ஆனால், மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லட்சுமிஉயிரிழந்தார். இதனிடையே மனைவி உயிரிழந்ததை அறிந்த கணவர் புயல்மணி, அடுத்த ஒரு மணிநேரத்தில் வீட்டில் உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதியினரின் உடல்களை உறவினர்கள் ஒன்றாக வைத்து இறுதி சடங்குகளை செய்தனர்.
இதையும் படிங்க:'ஸ்டெர்லைட் திறப்புக்கு தற்காலிக அனுமதி வேண்டும்' - கனிமொழி