நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று (நவ. 26) அதிகாலை மாமல்லபுரம் மரக்காணத்திற்கு இடையே கரையைக் கடந்தது.இந்நிலையில் புயலின் தாக்கத்தால் கடல் அலையின் சீற்றமானது அதிகரித்தது. இதனால் அருகே இருந்த 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் சூழ்ந்ததோடு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
நிவர் புயல்: மீனவ கிராமத்தைச் சூழ்ந்த கடல்நீர்!
நாகப்பட்டினம்: நிவர் புயல் காரணமாக சீர்காழி அருகே உள்ள மீனவ கிராமத்தினுள் கடல்நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மீனவ கிராமத்தை சூழ்ந்த கடல் நீர்
மேலும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை மீனவர்கள் தாங்களாகவே வெளியேற்றிவருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியை அலுவலர்கள் பார்வையிட்டதோடு, தண்ணீர் வடிவதற்கு உண்டான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டியதோடு, தண்ணீரை வடியவைக்க மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தண்ணீரால் சூழப்பட்ட ரிப்பன் மாளிகை