நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்யக்கோரி மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்டம் முழுவதும் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 9பெண்கள் கைது - கள்ளச்சாராய விற்பனை
நாகை: கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்ட 9 பெண் உட்பட 66 பேரை மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, வெளிப்பாளையம், கீழ்வேளூர், வலிவலம், பெருங்கடம்பனூர், மயிலாடுதுறை, மணல்மேடு, புதுப்பட்டினம், பெரம்பலூர், வைத்தீஸ்வரன் கோயில், தாண்டவன் குளம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பெண் உட்பட 66 பேரை காவலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 6 பைக், 250 லிட்டர் கள்ளச் சாராயம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஐந்து தினங்களில் மட்டும் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 66 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.