பயங்கரவாத தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் தீட்டியதாக சில அமைப்பைச் சேர்ந்த 14 பேர் அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்டனர். அதில் கைது செய்யப்பட்ட நாகை மாவட்டம், மடப்புரம் பகுதியைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் மூன்று பேர் நேற்று காலை 5.50 மணி முதல் 7.50 மணி வரை சோதனை நடத்தினர்.
பயங்கரவாத செயல்களில் தொடர்பு! நாகையில் என்ஐஏ சோதனை - தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர்
நாகப்பட்டினம்: தரங்கம்பாடி அருகே பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையதாக துபாயில் கைது செய்யப்பட்ட முஹம்மது இப்ராஹிமின் பூட்டிய வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத செயல்களில் தொடர்பா? என்ஐஏ சோதனை..!
இவரது வீடு கடந்த 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டு இருந்ததால், முஹம்மது இப்ராஹிமின் சகோதரர் முகம்மது ரஷீத், கிராம நிர்வாக அலுவலர், கிராம பிரமுகர்களின் முன்னிலையில், வீடு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.