நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி மாவட்டம் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அலுவலர், எஸ்பி நியமனம்! - mayiladuthurai collector lalitha
புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அலுவலர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
new ias and sp appointed for mayiladuthurai district
பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தின் சிறப்பு அலுவலராக ராதாகிருஷ்ணன் அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையில், அவர் சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டதால், மயிலாடுதுறையில் சிறப்பு அலுவலராக அவரால் பொறுப்பேற்க முடியாமல் போனது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசால் மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லை வரையறை செய்வதற்கான சிறப்பு அலுவலராக லலிதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
Last Updated : Jul 12, 2020, 2:05 PM IST