தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்! - கோலாகலம்

நாகை: நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

By

Published : May 4, 2019, 10:48 PM IST

நாகையில் உள்ளது பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மனுக்கும், எல்லையம்மனுக்கும் ஆண்டு தோறும் பிரமோத்ஸவ விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோத்ஸவ விழா இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடு நடைபெறும். இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், செடில் உற்சவம் வருகின்ற 12ஆம் தேதி நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details