நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக கண்காணிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்யும்விதமாக என்.சி.சி. மாணவர்களைப் பணியில் ஈடுபடுத்த முடிவுசெய்தனர். முதற்கட்டமாக, ஏவிசி கல்லூரி, பூம்புகார் கல்லூரி, தருமபுரம் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 42 தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நாகை கரோனா தடுப்புப் பணியில் என்.சி.சி. மாணவர்கள் - ncc students at nagapattinam
நாகை: கரோனா தடுப்பு நடவடிக்கையில் காவலர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க, காவல் துறை சார்பில் என்.சி.சி. மாணவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ncc
இவர்கள், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்கிடையே, மயிலாடுதுறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தடையை மீறி வெளியே வருபவர்களைத் தடுப்பது, கடைகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்களை அணுகுவது உள்ளிட்டவை குறித்து என்சிசி மாணவர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை விளக்கமாக எடுத்துக் கூறினார்.
இதையும் படிங்க:21 நாட்கள் லாக்டவுன்; தமிழ்நாடு கடந்த வந்த பாதை