தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகூர் தர்கா குள சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடக்கம்!

நாகை: புரேவி புயலால் சேதமடைந்த உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

darkah
darkah

By

Published : Feb 11, 2021, 12:32 PM IST

புரேவி புயலால் உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. இதையடுத்து சுற்றுச்சுவர்களை சீரமைக்க தமிழக அரசு 4.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்நிலையில், அதற்கான கட்டுமானப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

தர்கா குளம் அருகே நடைபெற்ற சிறப்பு பாத்திகாவில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் வளர்மதி ஆகியோர் இஸ்லாமியர்களோடு இணைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:கரோனாவால் நாடு திரும்பிய தமிழர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details