நாகப்பட்டினம்:உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று (ஜன.1) அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க ஐந்து மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.