நாகை மாவட்டத்தைச் சுற்றி உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இந்தச் சொத்துகளைப் பல்வேறு நபர்கள் கையகப்படுத்தி விற்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2012ஆம் ஆண்டு நாகூர் பங்கு தேர்தலில் முஹம்மது கலீபா சாஹிப் என்பவர் தர்கா ஆலோசனைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் தர்கா சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தர்கா சொத்துகளை விற்க தடை ஆணையும் பெற்றார்.
மேலும் தர்காவிற்குச் சொந்தமான பல்வேறு சொத்துகள் விற்பனை செய்யப்பட்டதும் இதன் மூலம் தெரியவந்தது. இந்நிலையில், வழக்கை தொடுத்த செய்யது முஹம்மது கலீபா சாஹிப்க்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மிரட்டல் வந்ததுடன், அவர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, சிறை சென்றதாகச் சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.