நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று (ஏப். 14) பெரிய வியாழன் நாளையொட்டி பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தை அற்புதராஜ் கலந்துகொண்டார்.
வேளாங்கண்ணி தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கு - பெரிய வியாழன்
பெரிய வியாழன் நாளையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு
முன்னதாக இயேசு பங்கேற்ற கடைசி இரவு விருந்து நிகழ்ச்சி பேராலய கலையரங்கத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க:'மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : மாசி வீதிகளை வலம் வரும் மீனாட்சி - சொக்கநாதர்'