மயிலாடுதுறை - விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளம் உடைந்து கிடப்பது ரயில்வே ஊழியருக்கு தெரிய வந்துள்ளது.
இதன் பிறகு ரயில் நிறுத்தப்பட்டு மயிலாடுதுறை ரயில்வே கோட்ட அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அலுவலர்கள், ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.