தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையைத் தொடர்ந்து நாகையிலும் என்ஐஏ அலுவலர்கள் சோதனை! - ஹசன் அலி

சென்னை: சென்னையைத் தொடர்ந்து நாகையிலும் ஹாரிஷ் முகமது என்பவர் வீடு, அலுவலகத்திலும் என்ஐஏ முகமை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தொடர்ந்து நாகையிலும் என்ஐஏ அலுவலர்கள் அதிரடி சோதனை

By

Published : Jul 13, 2019, 2:57 PM IST

சென்னை மண்ணடியில் இயங்கி வரும் வஹாபி இஸ்லாம், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மத்திய உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி ராகுல் தலைமையில் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், நாகை மஞ்சக்கொல்லை ஹாரிஸ் முகமது வீட்டிலும், சிக்கல் பகுதியில் அசன் அலி என்பவரது வீட்டிலும் அதிரடியாக நுழைந்த அலுவலர்கள், இன்று காலை முதல் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையைத் தொடர்ந்து நாகையிலும் என்ஐஏ அலுவலர்கள் அதிரடி சோதனை!

டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையில், இரண்டு வீடுகளில் நடைபெறும் இச்சோதனையில் மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் போன்றவற்றைக் கைப்பற்றி அவர்களது உறவினர்களிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமைக் குழுவினரால் சந்தேகிக்கப்படும் ஹாரிஸ் முகமது, ஹசன் அலி ஆகியோர் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், போலி கடவுச்சீட்டு வழக்கு, இவர்மீது வெளிநாடுகளில் இருப்பதாகவும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சோதனையின்போது இருவரும் வீட்டில் இல்லை என்பதும், அவர்கள் தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details