நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி பழையார், தரங்கம்பாடி, அக்கரைப்பேட்டை, திருமுல்லைவாசல், கீச்சாங்குப்பம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐஸ்கட்டி உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 700 டன் ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யப்படுகின்றன. விசைப்படகுகளுக்கு மொத்தமாகவும், மீன்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும் பனிக்கட்டியை விற்பனை செய்துவருகின்றனர்.
'எங்களுக்கும் நிவாரணம் கொடுங்க..!' - ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள் போர்க்கொடி! - nagappattinam
நாகப்பட்டினம்: "மீன்வரத்து தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்குவதுபோல், பனிக்கட்டி உற்பத்தியாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று, ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை வங்க கடலில் 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று அரசு சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தடைப்பட்டு கிடப்பதால் ஐஸ்கட்டி உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது. ஐஸ் உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் முடங்கியதால், தற்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அதனை பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பராமரிப்பு பணிகளுக்கு சுமார் ரூ.2 லட்சம் ரூ.5 லட்சம் வரை கூடுதலாக செலவாகிறது. எனவே, மீன்பிடி தொழிலை நம்பி வாழும் ஐஸ்கட்டி உற்பத்தியாளர்களுக்கு பராமரிப்பு பணிகளுக்கு ரூ.2 லட்சம் வங்கி மானியத்துடன் ரூ.5 லட்சம் கடனும், பனிக்கட்டி உற்பத்தியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்குவதுபோல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐஸ்கட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.