தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயலால் பாதித்த இடங்களை பார்வையிட்ட நாகை மாவட்ட ஆட்சியர்!

மயிலாடுதுறை: சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் பாதித்த இடங்களை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் இன்று (டிசம்பர் 5) நேரில் ஆய்வு செய்தார்.

புயலால் பாதித்த இடங்களை பார்வையிட்ட நாகை மாவட்ட ஆட்சியர்
புயலால் பாதித்த இடங்களை பார்வையிட்ட நாகை மாவட்ட ஆட்சியர்

By

Published : Dec 5, 2020, 8:24 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் பாதித்த இடங்களை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 52 மையங்கள் அமைத்து அதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவக் குழு அமைத்து மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தாழ்வானப் பகுதியில் உள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.

சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி தங்குதடையின்றி சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. மழை நீர் வடிவதற்கு 3 நாட்கள் ஆகக்கூடும்.

மேலும் சீர்காழி தாலுகா எடக்குடி, வடபாதி, மாதிரவேளூர், கீரங்குடி, சோதியகுடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அவர்களுக்கு முதற்கட்டமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

நகர் பகுதியை பொறுத்தமட்டில் மழை நீர் தேங்கிய இடங்களில் ராட்சத மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details