தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், ஐவநல்லூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். பெயர் தெரியாத காய்ச்சல் ஆனது கிராம மக்களிடையே இடைவிடாது பரவி வரும் சூழலில் காய்ச்சல் பாதிப்பால் பலருக்கு கை, கால் வீக்கம், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
மேலும் சிலர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலி விவசாயத் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர்.