நாகை மாவட்டம், பொரவச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பொன்னீஸ்வரி - பன்னீர் தம்பதியினர். பன்னீர் அவரது மனைவி பொன்னீஸ்வரி, பன்னீரின் தங்கை ராணி ஆகியோர் வழக்கம்போல நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், உறங்கிக் கொண்டு இருந்த மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்துகொண்ட கொள்ளைக் கும்பல் அவர்களிடம் இருந்த தாலி செயின், மோதிரம் உள்ளிட்ட 16 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.