நாகப்பட்டினம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்காக குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது! - குற்றவாளிகள் கைது
நாகை: தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை ஆட்சியரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
பாலசிங்கம்
அதன் தொடர்ச்சியாக தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த சிங்கம், பிலால், விஜய் உள்ளிட்ட புனைப் பெயர்களைக் கொண்ட பாலசிங்கம் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : May 29, 2019, 7:55 PM IST