சமீபத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி நாகை மாவட்டத்தில் அலுவலர்கள் உள்பட 47 சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கமும், பணி மாறுதலும் செய்யப்பட்டனர்.
சுமைதூக்கும் தொழிலாளர் போராட்டத்தால் விவசாயிகள் பரிதவிப்பு! இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாகை மாவட்டத்தில் 284 நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் கடைமடை விவசாயிகள் பரிதவித்துவருகின்றனர். இதனிடையே பணி நீக்கம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறினால் வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்து தமிழ்நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் இதையும் படிங்க:நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு - விவசாயிகள் குற்றச்சாட்டு