தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியவகை பருத்தி - ஏலத்தை தொடங்கிவைத்த ஆட்சியர்! - auction

நாகை: அரியவகை பருத்தி ஏலத்தை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார்.

அரிய வகை பருத்தி

By

Published : Jun 7, 2019, 7:45 AM IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடைகாலத்தில் விளையும் அரியவகை பருத்தி தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து இந்த பருத்தியைத் தமிழ்நாடு அரசு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் கொள்முதல் செய்கிறது. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகா ஆகிய நான்கு இடங்களில் இந்த பருத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது.

வருடந்தோறும், ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் இந்த பருத்தியைக் கொள்முதல் செய்வதற்காக இந்தியப் பருத்தி கழகம் திருப்பூர், கோவை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து மறைமுக ஏல முறையில் கொள்முதல் செய்வது வழக்கம்.

நடப்பாண்டுக்கு குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடங்கிய ஏலத்தை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோருடன் பருத்தியின் விளைச்சல், தரம், விலை நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

ஏலத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பருத்தி அதனுடைய தரத்திற்கு ஏற்றாற்போல் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மறைமுக ஏல முறையில் விலை கூறப்படுவதால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வழி ஏற்படுகிறது.

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்திக்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி விவசாயிகள் தங்கள் பருத்திக்கான விலையைப் பெற முடியும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details