நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மார்த்தாண்டம் பகுதிக்கு மினி வேனில் கருவேலங்கடை பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் மீன் ஏற்றிச் சென்றார். அப்போது வேளாங்கண்ணியை அடுத்த காரைநகர் அருகே மினிவேன் சென்ற போது கொர்க்கையிலிருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து மினி வேனில் நேருக்கு நேர் மோதியது.
அரசுப் பேருந்து - மினி வேன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு - நாகை மாவட்ட செய்திகள்
நாகை : மினி வேனும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nagai district News
இந்த விபத்தில் மினி வேன் ஓட்டுநர் சத்யராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.