காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் என்பவர் இரண்டு பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்கள் ஆகியும் அறை காலி செய்யப்படாத காரணத்தால் விடுதியின் மேலாளர் அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டுள்ளார்.
தங்கும் விடுதியில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு! - உயிரிழப்பு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி உள்ள தனியார் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அறையில் தங்கியிருந்த அருளானந்தத்திற்கு அவர் விடுதிக்கு கொடுத்திருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நம்பருக்கு அழைப்பு செல்லாததால் சந்தேகமடைந்த மேலாளர் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் அறையின் பூட்டை உடைத்து பார்த்தபோது, அறையின் உள்ளே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையின் பின்புறத்தில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் இது குறித்து சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்த வேளாங்கண்ணி போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.