தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்கம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்! - உண்ணாவிரத போராட்டம்
நாகப்பட்டினம்: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணமாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்னாவிரத போராட்டம் நடத்தினர்.
More than 100 private school teachers starve
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் குடியரசு தலைமை தாங்கினார்.
அப்போது, பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதற்கு அரசு அனுமதி கோரியும், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிவாரணமாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.