புரவி புயல் காரணமாக பெய்யும் தொடர் கனழையால் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்தன.
கஞ்சாநகரம் ஊராட்சியில் பொண்ணுக்குடி, மங்களூர் கிராமங்களில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,பூம்புகார் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டார். தொடர்ந்து பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டார்.