தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 7, 2023, 10:29 PM IST

Updated : Jan 7, 2023, 10:42 PM IST

ETV Bharat / state

பொங்கல் விழாவில் கிட்டிப்புள்ளு விளையாடி மகிழ்ந்த எம்எல்ஏ!

மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், பொங்கல் விழாவை தொடங்கி வைத்து கிட்டிப்புள்ளு விளையாடி மகிழ்ந்தார்.

கிட்டிபுல் விளையாடி மகிழ்ந்த எம்எல்ஏ
கிட்டிபுல் விளையாடி மகிழ்ந்த எம்எல்ஏ

பொங்கல் விழாவில் கிட்டிப்புள்ளு விளையாடி மகிழ்ந்த எம்எல்ஏ

மயிலாடுதுறை: கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பத்தடி உயர மண்பானை வைத்து, அதில் பொங்கல் பொங்குவது போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அருகில் கூரை வீடு ஒன்று கட்டப்பட்டு, மாடுகள் கரும்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார் ஆகியோர் போட்டிகளைக் குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தனர். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியத்தை வளர்க்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மேலும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் சில்லி கோடு தாண்டுதல், மெதுவாகச் சைக்கிளில் செல்லுதல், தவக்களை ஓட்டம், வளையம் வீசுதல், மண்பானையில் ஓவியம் வரைதல், ரங்கோலி ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்குப் பொங்கல் வைக்கும் போட்டி நடைபெற்றது. விறகு அடுப்பில் மண் பானையில் ஏராளமானோர் பொங்கல் வைத்து போட்டிகளில் பங்கேற்றனர். அப்போது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சிறுவர்களுக்கான கிட்டிப்புள் போட்டியில் பங்கேற்று, ஆர்வமுடன் விளையாடி மாரி உற்சாகமடைந்தார்.

இதையும் படிங்க:சண்டைக்கு தயாராகும் சேவல்கள்.. தமிழ்நாடு அரசு அனுமதிக்க கோரிக்கை!

Last Updated : Jan 7, 2023, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details