தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு - Tarangambadi Taluk Karuvazharai village

மயிலாடுதுறை மாவட்டம் கருவாழகரை கிராமத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்- தரிசனம்
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்- தரிசனம்

By

Published : Jul 29, 2022, 10:46 AM IST

நாகப்பட்டனம்:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.

முதலாவதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழகரை கிராமத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் தரிசனம் மேற்கொண்டார்.

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்- தரிசனம்

பின்னர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் சீர்காழியில் உள்ள கோயில்களில் ஆய்வு மற்றும் தரிசனம் மேற்கொள்ள உள்ளார். அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணனுக்கு செவாலியே விருது!

ABOUT THE AUTHOR

...view details