நாகையிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 மீனவ கிராமங்கள் உள்ளன. அம்மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராமமாக தரங்கம்பாடியை பெரும்பாலான மீனவ கிராமங்கள் ஏற்றுகொண்டதால், கடந்த 19ம் தேதி தலைமை மீனவ கிராமமாக தரங்கம்பாடி பஞ்சாயத்தார்களுக்கு தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதிகளை சேர்ந்த மீனவ கிராமங்களான கொடியம்பாளையம், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கீழமூவர்க்கரை, சாவடிகுப்பம், வானகிரி, சின்ன மேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, வெள்ளக்கோயில், பழையார், தர்காஸ், நாயக்கர்குப்பம், மேலமூவர்க்கரை உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் சீர்வரிசை எடுத்துவந்து பரிவட்டம் கட்டினர்.
இதனையடுத்து, தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் 18 பேர் பரிவட்டத்தை கட்டிக் கொண்டு தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ பஞ்சாயத்தார்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று (நவ.23) சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “இன்று முதல் 26 ஆம் தேதி வரை வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.