தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சசிகலா வரட்டும் பார்க்கலாம்' - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் - சட்டப்பேரவைத் தேர்தல்

நாகை: சசிகலா விடுதலைப் பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு, அமைச்சர் ஓ.எஸ். மணியன் 'வரட்டும் பார்க்கலாம்' எனப் பதிலளித்துள்ளார்.

OS Maniyan Comment about Sasikala Release
OS Maniyan Comment about Sasikala Release

By

Published : Sep 7, 2020, 4:01 PM IST

தமிழ்நாட்டுல் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் முக்கியக் கட்சிகள் இப்போதே களமிறங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகவுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலாவின் விடுதலை குறித்து நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் கேட்கையில், ''வரட்டும் பார்க்கலாம்'' எனப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து, ''இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. அதனால் அரசு சொல்லும் விதிமுறைகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி கூட்டம் கூடுவதைத் தவிர்த்தால், கரோனா சூழலிலிருந்து விரைவில் வெளிவரலாம்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர் சந்திப்பு

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரண்டு குழு அமைத்துள்ளது. அந்தக் குழுவினர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும்.

கிஷான் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், பயனாளிகளே அப்டேட் செய்யும் வகையில் எளிமைப்படுத்தியதால் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. முறைக்கேடு விவகாரத்தில் விசாரணை நடந்துவருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இதையும் படிங்க:அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து ஏஐசிடிஇ, யுசிஜி விதிமுறைகள் பின்பற்றப்படும்'

ABOUT THE AUTHOR

...view details