நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில், சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், 111 பயனாளிகளுக்கு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
’கல்யாண வீட்டிற்கு வருபவர்கள் அடுப்பை இடிப்பதில்லை’ - ஓ.எஸ்.மணியன் விமர்சனம் - பொன்.ராதாகிருஷ்ணன்
நாகப்பட்டினம்: கூட்டணி குறித்த பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு, கல்யாண வீட்டிற்கு சாப்பிட வருபவர்கள் யாரும் அடுப்பை இடித்துவிட்டு வருவதில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருப்பதால், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். திமுகவுடனும் கூட்டணி அமையலாம் என்ற பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், கல்யாண வீட்டிற்கு சாப்பிட வருபவர்கள் யாரும், அடுப்பை இடித்துவிட்டு வருவதில்லை என்று விமர்சித்தார். மேலும், கண் மாறாமல் இருந்தால் காட்சிகள் மாறாது என்றும், கண்ணுக்கு காமாலை ஏற்பட்டால் கட்சிகளின் காட்சிகள் மாறும் எனவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக 10 மாநில முதலமைச்சர்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்!