மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசு திருமண நிதி உதவித் தொகை கோரி விண்ணப்பித்து இருந்தவர்களில் ரூ.25,000 மற்றும் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50,000 பணத்துடன், தாலி செய்ய எட்டு கிராம் தங்கக் காசு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள, ஏழை எளிய மக்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூலம் அரசின் உதவித்தொகை உதவுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல், சோழம்பேட்டை, சீர்காழி ஆகிய பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியார் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை, காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு படித்த பட்டதாரி பயனாளிகளுக்கு நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கத்தை வழங்கினார்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 1660 பயனாளிகளுக்கு 6 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டன. முன்னதாக இந்த நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிய அமைச்சர் மெய்யநாதன் , பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு செல்வதாகவும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் இருந்து 32 ரூபாய் பிரதமரின் கஜானாவுக்கு செல்வதாகவும் அது மீண்டும் ஏழை எளிய மக்களுக்கு திட்டமாக வரவில்லை. அதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திருப்பிவிடப்படுகிறது என்று தெரிவித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு வருமானம் பிரதமரின் கஜானாவுக்கு செல்கிறது - அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாதாள சாக்கடை மறுசீரமைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருமண நிதி உதவித் தொகை கோரி இதையும் படிங்க: பெட்ரோல் டீசல் விலை கடந்த 16 நாட்களில் லிட்டருக்கு ரூ.10 உயர்வு