மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள சீகன் பால்கு ஆன்மீக வளர்ச்சி மன்றத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பகிர்வு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு, பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நளதம் விருதுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “இயேசுவின் வார்த்தைகள் அரசாங்கத்தின் திட்டங்களாக மாறி உள்ளது. நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு அளித்தீர்கள் என்பதுதான் காலை உணவுத் திட்டம். நான் தாகமாய் இருந்தேன், நீங்கள் தாகத்தை தணித்தீர்கள் என்பது ஒவ்வொரு மனிதனின் தாகத்தை குறிக்கும். ஆண்களுக்கு பெண்கள் அடிமை என்பதை மாற்றி, பெண்களின் உரிமை காக்கப்பட வேண்டும். பெண்ணடிமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே திராவிட மாடல்.
இதையும் படிங்க: நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா; கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம்!
நான் உங்களில் ஒருவன் என்று முதலமைச்சர் கூறுவது, யாரும் அந்நியர் அல்ல, நாம் அனைவரும் சமம் என்பதாகும். நான் ஆடையின்றி இருந்தேன் நீங்கள் ஆடை கொடுத்தீர்கள் எனப்படும். இங்கு ஆடை என்பது ஆடை மட்டுமல்ல, அது உரிமை, பெண்களின் உரிமை. இன்றைக்கு முதல்வர் பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 விழுக்காடு வாய்ப்பளிக்கிறார். அதுவே பெண்களின் உரிமை.