சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகையில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, காவல் துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அவுரிதிடலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - nagapattinam news
நாகப்பட்டினம்: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நாகப்பட்டினத்தில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!
அம்மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், காவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார்.
இதையும் படிங்க:கொரோனோ பாதிப்பு: நாகை வந்த 49 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல்!