தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள கூலித்தொழிலாளர்கள் மீட்க கோரிக்கை! - தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

நாகை: தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக சிக்கித் தவிக்கும் தரங்கம்பாடியை சேர்ந்த 24 கூலி தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்லுமாறு வாட்ஸ் அப் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

mercenaries-trapped-in-outer-space-request-by-whmercenaries-trapped-in-outer-space-request-by-whats-upats-up
mercenaries-trapped-in-outer-space-request-by-whats-up

By

Published : Apr 29, 2020, 9:41 AM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிலுள்ள மாத்தூர், ஆக்கூர், குரங்குபுத்தூர் பகுதிகளை சேர்ந்த 24 பேர் கடந்த ஜனவரி மாதம் வெளி மாநிலங்களுக்கு கூலி வேலைகளுக்காக சென்றுள்ளனர். தெலங்கானாவிற்கு 17 நபர்களும்; கர்நாடக மாநிலத்திற்கு 7 நபர்களும் கட்டட வேலை, வர்ணம் பூசுதல், சிற்ப வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்காக சென்றுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் தெலங்கானா, கர்நாடகாவில் சிக்கியுள்ள கூலித்தொழிலாளிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லுமாறு வாட்ஸ் அப் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் கூலித்தொழிலாளர்கள்

மேலும், ஊரடங்கினால் வேலை இல்லாமல் பட்டினியால் வாடும் தங்கள் பிள்ளைகளை தமிழ்நாடு அரசு மீட்டு தரவேண்டும் என்று கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பெண் லீலை மன்னன் நாகர்கோவில் காசி மீது குண்டர் சட்டம் பாய்கிறது!

ABOUT THE AUTHOR

...view details