நாகை மாவட்டம், மயிலாடுதுறை டவுன் பகுதியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் உள்ள சாலையில் அந்த பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் குப்பையை கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பள்ளி அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் வேதனை - near school
நாகை: நகராட்சி பள்ளி அருகே கொட்டப்படும் மாட்டிறைச்சி கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இறைச்சி கழிவு குவியல்கள்
குறிப்பாக, இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.