ஆசிரியர் தினத்தன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சிறந்த கல்வி சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு கடந்த சில வருடங்களாக விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு விருது வழங்கிய மதிமுக - நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் : மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் சிறந்த கல்வி சேவையாற்றிய ஆசிரியருக்கு அவரது வீட்டிற்கு நேரில் சென்று விருது வழங்கப்பட்டது.
அந்த வகையில், மதிமுக மாணவரணி சார்பில் எட்டாம் ஆண்டாக நேற்று (செப்.05) நடைபெற்ற விழாவில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை சேந்தங்குடியில் வசிக்கும் கிளியனூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை சாந்தி என்பவரின் வீட்டுக்கே நேரில் சென்று விருதும் சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய அணி செயலர் முருகன், மாநில மாணவரணி துணைச் செயலர் ஆசைத்தம்பி உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியைக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.