நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் மே 15ம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர், விநாயகர், முருகன் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோர் ஞானபுரீஸ்வரர் கோயில் வழிபாடு நடத்தினர்.
ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா தொடக்கம் பின் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து குருமகா சன்னிதானம் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11 நாட்கள் நடைபெறும் பெருவிழா, திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டில் தினமும் சமய சொற்பொழிவு, கருத்தரங்கம் சமய பயிற்சி வகுப்பு திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.