மயிலாடுதுறை மாவட்டத்தில், அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 200 படுக்கை வசதிகள் கொண்ட இந்த வார்டில் 202 நோயாளிகள் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
மயிலாடுதுறையில் கரோனா வார்டாக மாறும் சமுதாயக் கூடம்!
மயிலாடுதுறை: அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடவசதி இல்லாததால், சமுதாயக் கூடம் 60 படுக்கை வசதிகளுடன் கரோனா வார்டாக தயாராகி வருகிறது.
புதிதாக தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்த 35 நோயாளிகளை சீர்காழி அரசு மருத்துவமனையிலும் 11 நபர்கள் தனியார் கல்லூரி விடுதியிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் நோயாளிகள் அதிகமாகிவிட்டதால் சிகிச்சைக்கு சேர்த்துக்கொள்ள இடவசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ரயில்வே நிலையம் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் (பயணிகள் மாளிகை) 60 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய வார்டினை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா, மயிலாடுதுறை வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க:உங்களுக்குக் கரோனாவா? பயப்படாதீங்க...!