மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு, காரைமேடு, அல்லிவிளாகம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் கரும்பு விவசாயம் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு நிவர் புயலில் போது வீசிய சூறைக்காற்றில் கரும்புகள் சாய்ந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறையில் நிவர் புயலால் 100 ஏக்கர் கரும்பு விவசாயம் பாதிப்பு! - nagapattinam cyclone effect
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நிவர் புயலால் 100 ஏக்கர் பொங்கல் கரும்பு விவசாயம் பாதிப்படைந்துள்ளதாகவும், அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை
இதனால் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் மூதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என மனவேதனை அடைந்துள்ளனர்.புயல் கரையை கடந்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை சேதம் குறித்து பார்வையிட அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைவாக ஆய்வு மேற்கொண்டு, உரிய இழப்பீடு தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.