தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2.5 லட்சம் மோசடி: ஊராட்சி செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்!

நாகப்பட்டினம்: பட்டமங்கலம் ஊராட்சியில் வரிவசூல் செய்ததில் ரூ.2.5 லட்சம் மோசடி செய்ததாக ஊராட்சி செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஊராட்சி செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
ஊராட்சி செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

By

Published : Nov 1, 2020, 1:04 PM IST

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பட்டமங்கல ஊராட்சி என்பது மயிலாடுதுறை நகராட்சியை ஒட்டியுள்ளது. இந்த ஊராட்சியில் வருடத்திற்கு ரூ.8 லட்சம் வரை வீட்டுவரி வசூல் செய்யப்படுவது வாடிக்கை. மேலும் புதிதாக வீடு கட்டுவதற்கு அனுமதிக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ஊராட்சி மன்ற செயலராக பிரியா என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வரவுசெலவு கணக்குகளை அலுவலர்கள் ஆய்வு செய்தபோது வரிவசூல் செய்த பில்லுக்கும் அலுவலகத்தில் கணக்கு காட்டப்படும் பில்லுக்கும் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஊராட்சி வரிவசூல் செய்ததில் ரூபாய் 2.5 லட்சம் கணக்கில் வராமல் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த விசாரணையில், ஊராட்சி செயலர் பிரியா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மயிலாடுதுறை ஊராட்சிகள் துறை வட்டாரவளர்ச்சி அலுவலர் சரவணன் பட்டமங்கல ஊராட்சி செயலர் பிரியாவை பணியிடைநீக்கம் செய்துள்ளார். இதுகுறித்து ஊராட்சித்துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: சம்பா சாகுபடி நடவு: உற்சாகத்துடன் பணி செய்யும் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details