தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் வெண்கல வென்ற மாணவன் சாமுவேலுக்கு ஜோரான வரவேற்பு - மயிலாடுதுறை மாணவன் வெண்கல பதக்கம்

சிவகங்கையில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நரிக்குறவ மாணவன் சாமுவேல் என்பவரை தோளில் தூக்கியும் பாசிமணி அணிவித்தும் பல்லவராயன்பேட்டை கிராமத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 1, 2023, 10:12 PM IST

சாமுவேலுக்கு ஜோரான வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை கிராமத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஆர்‌.சாமுவேல்(14) என்ற நரிக்குறவ சமுதாய மாணவர், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் (Tamil Nadu level boxing tournament) கலந்துகொண்டார்.

இந்த போட்டியில் அவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாநில போட்டியில் பதக்கம் வென்று ரயில் மூலம் தனது சொந்த ஊருக்கு இன்று (பிப்.1) திரும்பிய அவருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நரிக்குறவர் சமுதாயத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் தலைமையில் ரயில் நிலையம் வந்த அங்கிருந்த மக்கள், வெற்றி பெற்ற மாணவன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு சால்வை அணிவித்தும் மாணவனை தோளில் தூக்கியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாணவனுக்கும், ஆசிரியருக்கும் ஊசிமணி அணிவித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். இந்நிலையில் உண்டு உறைவிடப்பள்ளியில் படித்தபடியே மாநில அளவிலான குத்து மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவன் சாமுவேல், தான் அடுத்தப் போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு இந்த பள்ளி மாணவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய நீதிமன்றங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் வழக்கு தொடர முடியும் - வெளிநாடு வாழ் இந்தியர்

ABOUT THE AUTHOR

...view details