தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பு கொள்முதல் விவகாரம் - விவசாயிகள் குற்றச்சாட்டு - tamil nadu government pongal gift package

மயிலாடுதுறையில் அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிற்கான கரும்புகளை ஆளும்கட்சியினர் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

tamil nadu government pongal gift package
கரும்பு

By

Published : Jan 5, 2022, 12:15 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் நலன் கருதி கரும்பு கொள்முதல் செய்யும்போது அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரிடையாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டுமே கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

முத்துவேல், கரும்பு விவசாயி

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கான கரும்புகளை ஒரு கரும்பு 15 ரூபாய் என்று ஆளும் கட்சியினர் முன்பணம் கொடுத்து பெரும்பாலான கரும்புகளை முன்னதாகவே கொள்முதல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்களிடமிருந்து பொங்கல் சிறப்பு தொகுப்பிற்காக முன்னதாகவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கு அரசு அறிவிப்பின்படி உரிய விலையை பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Sand Shortage: 'மணல் தட்டுப்பாட்டை போக்க விரைவில் அறிவிப்பு வெளியிடும் அரசு!'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details