மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
மேலும் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் பகுதியை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி கையில் வேர்கள், அழுகிய சம்பா பயிரை எடுத்து வந்து தண்ணீரில் முழுவதுமாக பயிர்கள் மூழ்கியதால் வீணாகிவிட்டதாகவும் , அதனால் தாங்கள் நஷ்டமடைந்துவிட்டதாகவும் கூறினார்.