தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டம் - MASI MAGA FESTIVAL HELD ON AFTER 200 YEARS IN TIRUMANANCHERI TEMPLE

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டம் 200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. மாசி மகப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

திருமணஞ்சேரி உத்வாகநாதர் தேர் விழா
திருமணஞ்சேரி உத்வாகநாதர் தேர் விழா

By

Published : Feb 16, 2022, 4:23 PM IST

மயிலாடுதுறை:குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி அம்பிகையை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

திருமணமாகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளை பூஜித்து வேண்டிக் கொண்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் மாசி மக பெருவிழா மற்றும் தேரோட்டம் 200 ஆண்டுகளுக்கு நடைபெற்றது.

திருமணஞ்சேரி உத்வாகநாதர் தேர் விழா

இவ்விழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், சுவாமி, அம்பாள் வீதிஉலா காட்சி நடைபெற்ற நிலையில் 9ஆம் நாள் திருவிழாவான இன்று (பிப் 16) தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் திருநடனம் புரிந்தவாறு வந்து தேரில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, தக்கார் இளையராஜா மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர் இவ்விழாவினை தொடர்ந்து நாளை (பிப் 17) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையும் படிங்க:மழலையர் பள்ளிகள் திறப்பு: குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி உற்சாக வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details