மயிலாடுதுறை மாவட்டம் அனந்தநல்லூரைச் சேர்ந்தவர் புதுமலர்ச்செல்வி (32). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அந்நியூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குருமூர்த்தி (40) என்பவருக்கும் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளாகவுள்ள நிலையிலும் இத்தம்பதியினருக்கு குழந்தையில்லை.
இதனால், குருமூர்த்தி நாள்தோறும் குடித்துவிட்டு புதுமலர்ச்செல்வியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை அந்நியூரில் புதுமலர்ச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தகவலறிந்த பாலையூர் காவல் துறையினர் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.