தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் முடவன் முழுக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்! - Aippasi month Tula Utsava Tirthavari

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஐப்பசி மாத துலா உற்சவ தீர்த்தவாரியில் பங்கேற்க முடியாத முடவனுக்கு இறைவன் காட்சி தந்து, தீர்த்தவாரி அளித்த நாளான முடவன் முழுக்கை முன்னிட்டு, அதிகாலை முதல் காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை தரிசித்தனர்.

மயிலாடுதுறையில் முடவன் முழுக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறையில் முடவன் முழுக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

By

Published : Nov 17, 2022, 7:13 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம்.

அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் ஐப்பசி மாதம் முடிவதற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. ஆகையால் அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், காவிரியில் நீராடிய பலனை அளித்தார்.

அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை 1ஆம் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, இன்று (நவ.17) காலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். காலை 11:30 மணி அளவில் வதான்யேஸ்வரர் கோயிலில் இருந்து சந்திரசேகரர் உற்சவமூர்த்திகள் புறப்பாடாகி காவிரியின் வடக்கு கரையில் எழுந்தருளினர்.

மயிலாடுதுறையில் முடவன் முழுக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பின்னர் காவிரியில் அஸ்திர தேவருக்கு சிறப்புப்பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க:Sabarimala: கார்த்திகை விரதம் தொடங்கியது.. சென்னையில் அலைமோதிய ஐயப்ப பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details